மோடி மனைவியை காணாமல் அதிர்ச்சி அடைந்த அமெரிக்க அதிகாரிகள்
- IndiaGlitz, [Tuesday,June 27 2017]
பாரத பிரதமர் நரேந்திரமோடி அமெரிக்கா உள்பட மூன்று நாடுகள் சுற்றுப்பயணத்தை செய்து வருகிறார். போர்ச்சுக்கல், அமெரிக்காவை அடுத்து அவர் தற்போது நெதர்லாந்து நாட்டிற்கு சென்றுள்ளார். இந்த நிலையில் அமெரிக்கா சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலினா டிரம்ப் ஆகியோர் சிறப்பான வரவேற்பை அளித்தனர்.
இந்நிலையில் பிரதமர் மோடி வெள்ளை மாளிகையில் காரில் இருந்து இறங்கிய ஒரு காட்சியின் வீடியோ தற்போது இணையதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது. பொதுவாக ஒரு நாட்டின் பிரதமர் அல்லது அதிபர் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்யும்போது மனைவியை அழைத்து செல்வது வழக்கம். ஆனால் பிரதமர் மோடி சிறுவயதிலேயே தன்னுடைய மனைவியை விட்டு பிரிந்து வாழ்வதால் அவர் எந்த நாட்டிற்கு சென்றாலும் தனியேதான் சென்று வருகிறார்.
இந்த நிலையில் வெள்ளை மாளிகையின் முன் வெளிநாட்டு தலைவர்களின் கார் வரும்போது ஒருபக்கம் அந்த தலைவரின் பக்கம் உள்ள காரின் கதவையும், இன்னொரு பக்கம் அவருடைய மனைவி இருக்கும் பக்கமுள்ள காரின் கதவையும் மரியாதையுடன் அதிகாரிகள் திறப்பது வழக்கம். அதேபோல் மோடியின் வருகையின்போது நடந்தது. ஆனால் ஒருபக்கத்தில் இருந்து மோடி மட்டுமே இறங்கினார். இன்னொரு பக்கத்தில் மோடியின் மனைவி இறங்குவார் என்று எதிர்பார்த்த அதிகாரி அதிர்ச்சி கலந்த குழப்பம் அடைந்தார். இந்த சுவாரஸ்யமான வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.